காலில் அரை
காது வரை என‌
காலம் செல்ல‌


காலில் அரை
கால் மணி நேரமே
என்றாகி


காலில் அரை
காலாய் வளர்ச்சியுற்று
காலே மிதமாகி
காலங்களைக் கடந்து


அரையே உருவானதே
அதுவே முழுதாய்
அதரம் கொண்டதே


அரையும் போதாமல்
காலைக் கேட்கிறதே


அழுகும் குடலும்
அலறும் சிறுநீரகமும்
அவனைக் சபிக்கிறதே


ஆபிஸ் போகும் நீ
ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி போக‌
அல்ல‌து


மயக்கத்தில் மரணம் தழுவி
மண்ணுலகம் செல்ல‌


கொல்லும் குடியின்
கொடும்பாவி எரி
மனதில்


கல்லும் கரையும்
கனியின் வாய்மொழி கேட்டால்
முதலில்....---------------