கடந்த வாரம் நான் மெட்ராஸ்பவன் சிவாவின் ஃபோரம் மால் பற்றிய இந்தப் பதிவையையும் திடங்கொண்டு போராடு சீனுவின் சொல்ல விரும்பாத ரகசியம்  படித்தபோதும் அதிர்ச்சியடைந்தேன்.  காரணம் அண்ணன் மின்னல் வரிகள் பாலகணேஷின் பின்னூட்டங்கள்.  தன் படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்குக் கூட "ஹா ஹா என்று வாய்விட்டுச் சிரித்த உங்களுக்கு என் உள்ளம் நிறைந்த‌ நன்றி" என்றுதான் பதில் பின்னூட்டம் இடுவார்.  இப்போது என்னவென்றால் புதிதாக ஆங்கிலத்தில் பின்னூட்டம்.
எனக்கு ஒரு சந்தேகம், ஒரு வேளை அவர் போனில் பின்னூட்டம் எழுதியிருப்பாரோ என்று.  கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் அண்ணன் ஆண்டிராய்டு போன் வாங்கியிருக்கக் கூடும் என்று புரிந்துவிட்டது.  இருந்தாலும் என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அவருக்கு போன் செய்து கேட்டேவிட்டேன். 
"என்ன சார், ஆண்டிராய்டு போன் வாங்கிட்டீங்களா?"


"ஆமா, எப்படி கண்டுபிடிச்சே?"


"இல்ல, இன்னைக்கு இங்கிலீஷ்ல கமெண்ட் போட்டிருந்தீங்களே, அதைவச்சி ஒரு சந்தேகம்"


"அதானே, நான் செந்தமிழ்ல கமெண்ட் போடுற ஆளு, எப்படி இங்கிலீஷ் கமெண்ட்னு உனக்கு சந்தேகம் வந்திருக்கும், கரெக்ட்"


"சார், உங்க ஆண்டிராய்டு போனிலேயே தமிழ்ல டைப் பண்றதுக்கு சாப்ட்வேர் இருக்கு, நான் அப்புறமா அதுக்கு லின்க் அனுப்பறேன்"


சொல்லிவிட்டேனே தவிர மனதுக்குள் வேறு ஒரு சிந்தனை.  இதை ஒரு பதிவாக வெளியிட்டால் என்ன?  நிறைய பேருக்கு பயன்படுமே என்று நினைத்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.இந்த அப்ளிகேஷனை நிறுவ நமக்கு வேண்டியது ஒரு ஆண்டிராய்டு போன். எந்த வெர்ஷனாக இருந்தாலும் சரி.  கீழே உள்ள கூகிள் ப்ளேஸ்டோரின் முகவரியில் சென்று நிறுவிக்கொள்ளவும் அல்லது Google Play Store சென்று KM Tamil Keyboard என்று தேடவும்.இதை நிறுவியவுடன் நாம் முதலில் செய்யவேண்டியது Setting சென்று Language என்ற பிரிவில் KM Tamil Keyboard என்ற ஆப்ஷனை டிக் செய்துகொள்ளவும்.இதை நிறுவியவுடன் நீங்கள் தமிழில் டைப் செய்ய வேண்டிய தளத்துக்குச் சென்று வழக்கம்போல யுனிகோட் தட்டச்சு முறையில் டைப் செய்யவும். உதாரணமாக "பாலகணேஷ்" என்பதை  "baala kaNEsh" என்று டைப் செய்யவும்.  பின்னர் கீழிருக்கும்  "Cnv" என்ற‌  பட்டனை அழுத்தினால் ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகள் தமிழுக்கு மாறிவிடும்.சில வார்த்தைகளை தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று பார்ப்போம்.கொஞ்சம் - konjsam
நலம் - nalam
மகிழ்ச்சி  - makizchchi
வாழ்த்துக்கள் - vaazththukkaL
அரங்கம் - arangkamஇந்த மென்பொருளை தரவிறக்குவதற்கு மட்டுமே இணைய இணைப்பு தேவை.  பயன்படுத்துவதற்குத் தேவையில்லை.  இதை உபயோகித்து பதிவுகளும், பின்னூட்டங்களும் குறுஞ்செய்திகளும் அனுப்பலாம்.  பாலகணேஷ் சார், உடனே உங்க போனை எடுங்க, டயல் பண்ணுங்க, ச்சீ, டவுன்லோட் பண்ணுங்க.இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளவும்.நன்றி...