ராயப்பேட்டையின் மிக முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் சட்டென்று கண்ணில் படாது.  காரணம் அந்த இடத்தின் டிராபிக்.  மயிலாப்பூரிலிருந்து ராயப்பேட்டை போகும் வழியில் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டியதும் வரும் சிக்னலுக்கு முன்னால் இடதுபுறத்தில் இருக்கிறது இந்த ஹோட்டல்.  நண்பர் ஒருவரின் ட்ரீட் இந்த ஹோட்டலில் ஒருநாள் அரங்கேறியது.Ambience: கீழ்தளத்தில் Non-AC மேல் தளம் முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.  கூட்டமாக வருபவர்களுக்கு மேல் தளமே சிறந்தது.  தினமும் வந்து சாப்பிடுபவர்கள் கீழ் தளத்திலேயே சாப்பிடுகிறார்கள்.  மேல் தளம் மிகவும் நீட்டாகவே இருக்கிறது.  நான்குபேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் டேபிள் மற்றும் சோபா போட்டிருக்கிறார்கள்.  ஆனால் அதிக அளவில் உணவு வகைகள் வைக்கும்போது டேபிளில் இடம் போதவில்லை.


நாங்கள் ஆறுபேர் சென்றிருந்தோம்.  எல்லா உணவுவகைகளையும் சுவைத்துப்பார்க்கும் எண்ணத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளேட் ஆர்டர் செய்தோம்.  பிரியாணி வகைகளில் பிஷ், மட்டன், சிக்கன் மற்றும் ப்ரான் பிரியாணியும், சைட் டிஷ்ஷாக சிக்கன் மஞ்சூரியன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் பக்கோடா மற்றும் சிலோன் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.
சிக்கன் பக்கோடாமுதன்முதலில் வந்தது சிக்கன் பக்கோடா.  நாங்கள் ஆறுபேர் என்பதாலும், அனைவரும் பயங்கர பசியுடன் இருந்ததாலும் பக்கோடாவை போட்டோ எடுத்த அடுத்த நிமிடமே காலியானது.

சிக்கன் மொகல் பிரியாணி


ப்ரான் பிரியாணி

சிக்கன் செட்டிநாடு


எல்லா உணவு வகைகளையும் சூடாகவே கொண்டுவருகிறார்கள்.  சுவையும் அருமை.  பிரியாணியில் அரிசி சரியான பதத்தில் வெந்திருக்கிறது.  எக்ஸ்ட்ரா ரைத்தா மற்றும் குழம்பு வகைகளை கேட்டால் மட்டுமே கொடுக்கிறார்கள்.


ஆறுபேர் சாப்பிட்டும் மொத்த பில் ரூ.1535/- மட்டுமே.  அதாவது ஒரு ஆளுக்கு சுமார் 250 ரூபாய் வருகிறது.  கொஞ்சம் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும் இந்த சுவைக்கு இது worth என்றே தோன்றுகிறது.

நன்றி...