மால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா
Wednesday, August 07, 2013
Posted by கார்த்திக் சரவணன்
மால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா
சென்னைவாசிகளுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஜெமினி பாலத்திலிருந்து கடற்கரை செல்லும் வழியில் சோழா தாண்டியதும் இடதுபுறத்தில் பாலத்தை ஒட்டி அமைந்துள்ளது "ஹோட்டல் சவேரா". ஐந்து நட்சத்திர ஹோட்டலான இதில் ஒரு நாள் மதிய உணவு சாப்பிட்ட அனுபவமே இன்று.
இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பல உணவகங்கள் இருந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது "மால்குடி ரெஸ்டாரன்ட்" எனப்படும் உணவகம் தான்.
நாங்கள் சைவம், அசைவம் என ஒரு இருபது பேர் சென்றிருந்தோம். அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று மீல்ஸ் ஆர்டர் செய்தோம். இருபது பேரில் ஐந்து பேருக்கும் சைவமும் பதினைந்து பேருக்கு அசைவமும் ஆர்டர் செய்தோம். அசைவத்துக்கு சிறு கப்பில் பிரியாணி, ஒரு சிக்கன் குழம்பு, மட்டம் குழம்பு, மீன் குழம்பு தருகிறார்கள். சைவத்துக்கு சாம்பார், ரசம், மோர்க்குழம்பு போன்றவை.
மேலும், அனைவருக்கும் வேண்டும் என்கிற அளவுக்கு புரோட்டா, சப்பாத்தி, ஆப்பம், கல் தோசை, என்று கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஐட்டங்களை சாப்பிட்ட பின்னர் தான் நாம் மீல்ஸ்-க்கு தயாராக வேண்டும்.
மீல்சைப் பொறுத்தவரையில் சாதத்தை போதும் போதும் என்கிற அளவுக்கு கொட்டுகிறார்கள். குழம்பு வகைகளை வேண்டும் என்கிற அளவுக்கு கொடுக்கிறார்கள். வேறு எந்த காய்கறி வகைகளையும் கேட்டால் கொடுக்கிறார்கள். ஆனால் இவையனைத்தும் கேட்டால் மட்டுமே. நாங்கள் இருபது பேர் மட்டுமே அமர்ந்திருந்த அந்த உணவகத்தில் அவர்களால் எங்களை திருப்திப்படுத்தவே முடியவில்லை. அனைவரும் புரோட்டா, சப்பாத்தி, கல்தோசை என்று ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஆர்டர் கொடுப்பதற்காக கை காயக்காய காத்திருந்தோம். சாப்பிடுபவர்களின் வேகம் சமைப்பதிலும் பரிமாறுவதில் இல்லை.
சுவையைப் பொறுத்தவரையில் எதுவுமே குறை சொல்லும் அளவுக்கு இல்லை. அனைத்துமே அருமையாக இருந்தன. பணியாளர்களின் "பொறுமையான" உபசரிப்பால் எங்களுக்கு சாப்பிட்டு முடிக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. மீல்ஸ் முடிந்தவுடன் ஜூஸ் வேண்டுபவர்களுக்கு ஜூசும், ஐஸ்கிரீம் வேண்டுபவர்களுக்கு ஐஸ்கிரீமும் கொடுக்கிறார்கள். அதுவும் எத்தனை வேண்டுமானாலும் கொடுக்கிறார்கள்.
விலையைப் பொறுத்தவரை சைவ சாப்பாடு ஒரு ஆளுக்கு 550 ரூபாய் ப்ளஸ் வரிகள், சர்விஸ் சார்ஜ், மற்றும் சர்விஸ் டாக்ஸ். அசைவ சாப்பாடு ஒரு ஆளுக்கு 750 ரூபாய் ப்ளஸ் வரிகள், சர்விஸ் சார்ஜ், மற்றும் சர்விஸ் டாக்ஸ். இடத்துக்கும் சுவைக்கும் இந்த விலை சரிதான் என்றாலும் சேவை ஆமை வேகத்தில் இருப்பதால் சவேரா ஹோட்டலில் "மால்குடி ரெஸ்டாரன்ட்" தவிர்ப்பது நலம்.
முன்பெல்லாம் ஒருவர் இந்த இடத்தில் அமர்ந்திருந்து கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால் சில நாட்களாக அவர் இங்கு காணப்படுவதில்லை.
நன்றி.
This entry was posted by school paiyan, and is filed under
ஹோட்டல்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
என்ஜாய்....... :)
ReplyDeleteகைகள் காயக்காய வெயிட் பண்ணி சாப்பிட்டிருக்கிறோம், எஞ்ஜாயா?
Deleteஇப்பட்பட்ட இடங்களுக்கு நன்றாக சாப்பிடுபவர்கள் போவது நல்லது, சும்மா என்னை மாதிரி ஆட்கள் போனால் நஷ்டம்தான், இனி போகும் பொது சிபி அண்ணனை கூட்டிட்டு போங்க, வயிற்றுக்கு வஞ்சம் இல்லாமல் அண்ணன் சாப்பிடுவான்.
ReplyDeleteஆமாண்ணே... அடுத்தவாட்டி (போனா) சிபி அண்ணனைக் கூட்டிட்டுப் போறேன்...
Deleteஇப்ப மட்டுமல்ல நான் மீயூஸிக் அகடமிபக்கத்தில் வேலை செய்த போது போயிருக்கிறேன் சர்விஸ் சுத்த மோசம் அங்கு
ReplyDeleteஆமாம், மதுரைத்தமிழன்..... வெறும் சுவைக்காக மட்டும் போக முடியாது...
Deleteஎன்னது ஒரு சாப்பாடு 750 ரூபாயா? யப்பா சாமியோவ்! அதுவும் சாதாரன சவேரா ஹோட்டலுக்கு.
ReplyDeleteஎன்னது சவேரா ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சென்னையிலே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் கூட கிடையாது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றால் பல "குறைந்த பட்ச வசிதிகள்" இருக்கணும்; அதில் ஒரு குறைந்த பட்சம் வசதி golf மைதானம்? ஏதாவது ஹோட்டலுக்கு இருக்கா?
சென்னை என்றாலே புளுகு என்று ஆகிவிட்டது போல..!
ஆமாண்ணே, சாப்பாடு 750 ரூபாய் மட்டுமே....
Deleteதவறுக்கு மன்னிக்கவும், இது நான்கு நட்சத்திர ஹோட்டல்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நம்பள்கி...
நான் அப்படி சொல்லலே! International Standards படி நம்ம ஊர்லே ரேட்டிங் இஷ்டத்திற்கு போட்டுக் கொள்கிறார்கள். இங்குள்ள பெரிய பெரிய Holiday Inn ஹோட்டல்களே 3 ஸ்டார் கிடைத்தா அதிகம்...!
DeleteHoliday Inn Express Hotel - Pittsburgh -க்கே 3 ஸ்டார் தான்.
சென்னையில் உள்ள அடையார் பார்க்...கன்னிமாரா மாதிரி ஹோட்டல்களை விட Holiday Inn பல மடங்கு நல்லா இருக்கும்.
அங்கே எப்படி சவேராவிர்க்கு 4 ஸ்டார்; அதை சரி நம்ம ஆளை எவன் கேள்வி கேட்கிறது?
இருபது பேர் சென்றதால் ஆளாளுக்கு ஒரு ஐட்டம் கேட்டதால் குழப்பமென நினைக்கிறேன். இரண்டு மூன்று நண்பர்கள் ஒரே மேஜையில் இருந்தால் சரியாக பரிமாறக்கூடும் என நினைக்கிறேன்.
ReplyDeleteமொத்ஹம் நூறு பேர் அமரக்கூடிய உணவகத்தில் நாங்கள் மொத்தம் இருபது பேர் மட்டுமே அமர்ந்திருந்தோம்... கண்டிப்பாக கவனிக்க வேண்டும் தானே...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
அன்பின் ஸ்கூல் பையன் - எல்லா உணவு வகைகளும் நன்றாக இருக்கும் போது - விலை அதிகமாக இருக்கும் போது - சேவை சற்றே குறைவாக இருக்கும் போது - நிரவாகத்திடம் சேவையை சிறப்புடன் செய்ய வலியுறுத்தலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்களது கருத்துக்கு உடன்படுகிறேன் ஐயா... வரும்போது நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துவிட்டே வந்தோம்...
Deleteசென்னைவாசிகளுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
ReplyDelete>>
அப்போ வெளியூர்காரங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்ல வர்றீங்களா?!
ஹிஹி.... தெரிந்திருந்தால் நல்லது தானே...
Deleteஉங்க் பைஅய்னை ஹோட்டலுக்கு கூட்டி போகலையா?! பேக்கை ஓப்பன் பண்ணதும் முறைக்குறான்!!
ReplyDeleteநாங்கள் அலுவலகத்திலிருந்து போனோம்...
Delete// மட்டம் குழம்பு// மட்டன் குழம்பு அம்புட்டு மட்டமாவா இருந்தது ஹா ஹா ஹா
ReplyDeleteகிளி பறந்து போயிடுத்து பாவம் அவர் என்ன பண்ணுவார்
அய்யய்யோ, எப்பா சீனு, நான் இனிமே உன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்க கண்டுக்கமாட்டேன், சரியா....
Deleteஹா ஹா ஹா
Deleteநல்ல அனுபவம் தான் போல...:)
ReplyDeleteஆமா ஆமா சகோதரி.... நன்றி...
Deleteசாப்டுட்டே இந்த பதிவு எழுதியிருபிங்க போல..
ReplyDeleteஇல்லண்ணே, எப்பயோ சாப்பிட்டது.....
Deleteகிளி யாருக்க்காவது சாப்பிட வேண்டாம்னு ஜோசியம் சொல்லிச்சோ என்னவோ!
ReplyDeleteஇருக்கும் இருக்கும்..
Deleteஸ்பை ஸ்பான்சர் சாப்பாடுதானே ...?
ReplyDelete//அனைவரும் புரோட்டா, சப்பாத்தி, கல்தோசை என்று ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஆர்டர் கொடுப்பதற்காக கை காயக்காய காத்திருந்தோம். சாப்பிடுபவர்களின் வேகம் சமைப்பதிலும் பரிமாறுவதில் இல்லை.//
ஒங்க குரூப்பு முழுக்க புரோட்டா சூரியவே மீறுற ஆளுங்கதான் போல ...!
ஆமா ஜீவன்சுப்பு... ஸ்பான்சர் சாப்பாடே தான்...
Delete//சாப்பிடுபவர்களின் வேகம் சமைப்பதிலும் பரிமாறுவதில் இல்லை.//
ReplyDeleteஹஹஹஹா..
நம்ம வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டேங்கிறார்களே..
Deleteநடுத்தர விடுதிகளில் கிடைக்கும் அதே உணவு விலை மட்டும் ஐந்து மடங்கு .நட்சத்திர விடுதிகளில் உண்ட திருப்தி (பெருமை ) தானே !
ReplyDeleteநட்சத்திர ஹோட்டலுக்கு நாம் செல்வது சாப்பாட்டின் வித்தியாசத்தையும் சுவையை அனுபவிப்பதற்காகவே.... ஆனால் இங்கு சென்று சாப்பிடுவதற்கு பொறுமை மிகவும் அவசியம்....
Deleteநல்ல அனுபவம்... என்ஜாய்...!
ReplyDeleteநன்றி வெற்றிவேல்...
DeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteLuxurious hotel in chennai | Budget Hotels in Chennai | Centrally Located Hotels in Chennai |Hotels near Shankarnetralaya | Boutique Hotels in Chennai | Hudsonloungebar|Chennai Bars and Lounges | PubsinChennai | Hotel reservation chennai